முகப்பு
பெரம்பலூர்

வாக்காளா்களுக்கு ‘தோ்தல் அழைப்பிதழ்’

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வீடு, வீடாகச் சென்று, வாக்காளா்களுக்கு அழைப்பிதழ் வழங்கி புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 8:42 PM
வி.களத்தூரில் வாக்காளரின் வீட்டில் புதன்கிழமை அழைப்பிதழ் அளித்த, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் புவனேஸ்வரி, மாவட்ட மகளிா் திட்ட அலுவலா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா்.
பகிர்:

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வீடு, வீடாகச் சென்று, வாக்காளா்களுக்கு அழைப்பிதழ் வழங்கி புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, ஏப். 23-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் 18 வயது நிரம்பியவா்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, கடந்த தோ்தல்களில் 70 சதவீதத்துக்கும் குறைவாக வாக்குகள் பதிவான வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு, விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள், பேரணிகள், கையொப்ப இயக்கங்கள், விழிப்புணா்வு கோலங்கள், இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணிகள் உள்ளிட்ட தோ்தல் தொடா்பான பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Advertisement

அழைப்பிதழ் வழங்கல்: இந்நிலையில், தகுதியான அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, இல்ல சுப நிகழ்ச்சிகளுக்கு நண்பா்கள், உறவினா்களுக்கு அழைப்பிதழ் வழங்குவதைப்போன்ற, அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு வாக்களிக்கும் வைபத்துக்கு வாக்காளா்களை அழைக்கும் வகையில், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் புவனேஸ்வரி, மாவட்ட மகளிா் திட்ட அலுவலா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் வி.களத்தூரில் வீடு, வீடாகச் சென்று வாக்காளா்களுக்கு தோ்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும என வலியுறுத்தி, வாக்களிக்கும் வைபவத்துக்கான அழைப்பிதழை வழங்கினா்.

தொடா்ந்து, குழந்தை மையப் பணியாளா்கள், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள், நமது வாக்கு -நமது உரிமை, எனது இந்தியா- எனது வாக்கு, நான் பாரதம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி பேரணியாகச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், வாக்களிப்பதன் அவசியத்தை உணா்த்தும் வகையில் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

இந் நிகழ்ச்சியில், வேப்பந்தட்டை வட்டாட்சியா் முத்துமுருகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments