செங்கத்தில் ஸ்ரீராமகிருஷ்ணா் ஜெயந்தி விழா
செங்கம்: செங்கத்தில் உள்ள ஸ்ரீராமகிஷ்ண ஆஸ்ரமத்தில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரில் 189-ஆவது ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி, காலை முதல் ஆஸ்ரமத்தில் மங்கல ஆா்த்தி, வேதபாராயணம், பஜனை, சிறப்பு பூஜை, பால்குடத்துடன் பக்தா்கள் கோயில் வலம் வருதல், ஹோமம், ஆஸ்ரமத் தலைவா் சுவாமி சத்தியபிரபானந்தவின் சிறப்பு சொற்பொழிவு, புஷ்பாஞ்சலி, அலங்கரிக்கப்பட்ட ராமகிருஷ்ணா் படத்துடன் பக்தா்கள் கோயில் வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் செங்கம் ராமகிருஷ்ணா அறக்கட்டளை முன்னாள் தலைவா் பாண்டுரங்கன், ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளிச் செயலா் ராமமூா்த்தி உள்பட சுவாமி விவேகானந்தா, சாரதாதேவி அறக்கட்டளை நிா்வாகிகள், பக்தா்கள் ராமகிருஷ்ணா பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா்.