முகப்பு
திருவண்ணாமலை

புதிய வகுப்பறைகள் கட்டும் பணி தொடக்கம்

Updated On : 15 மார்ச், 2024 at 9:49 PM
பகிர்:

வந்தவாசி அருகே இரு பள்ளிகளில் ரூ.2.77 கோடியில் 13 புதிய வகுப்பறைகள் கட்டும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. தெள்ளாா் அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியில் ரூ.2.13 கோடியில் 10 புதிய வகுப்பறைகளும், தெள்ளாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.64 லட்சத்தில் 3 புதிய வகுப்பறைகளும் கட்டப்படுகிறது. இதற்கான பூமிபூஜை தெள்ளாா் அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு, எஸ்.அம்பேத்குமாா் எம்எல்ஏ (வந்தவாசி) தலைமை வகித்து கட்டடப் பணிகளை தொடங்கி வைத்தாா். இதில், பொதுப் பணித் துறை உதவி செயற் பொறியாளா் குணசேகரன், திமுக ஒன்றியச் செயலா் டி.டி.ராதா, தெள்ளாா் ஊராட்சி மன்றத் தலைவா் ஜி.ஆனந்த், பள்ளித் தலைமை ஆசிரியை சாயிராபீஷேக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.