விண்ணப்பித்துவிட்டீர்களா.. ? கப்பல் கட்டும் தொழிற்சாலை பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
உடுப்பி கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேற்பார்வையாளர்(சூப்பர்வைசர்) பணியிடங்கள் குறித்து...
கர்நாடகம் மாநிலம் மால்பேயில் அமைந்துள்ள, கொச்சின் கப்பல் கட்டும் தொழிற்சாலையின் செயல்பட்டு வரும் துணை நிறுவனமான உடுப்பி கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தில் ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள மேற்பார்வையாளர்(சூப்பர்வைசர்) பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க இன்றே(ஏப்.22) கடைசி நாள் என்பதால் விரைந்து விண்ணப்பிக்கவும்.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். : UCSL/IMS/HR/VN/F/II-SUP/MEF/67, Dated 02 April 2026
பணி: Supervisor
Advertisement
Advertisement
பிரிவு: Mechanical
காலியிடங்கள்: 11
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருப்பதுடன் பணி மேற்பார்வையாளராக 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது வெல்டிங், பிட்டர் டிரேடில் ஐடிஐ முடித்திருப்பதுடன் 3 ஆண்டுகள் மேற்பார்வையாளராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: எலக்ட்ரிக்கல்
காலியிடங்கள்: 3 (UR -2,OBC-1)
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அல்லது எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் ஐடிஐ தேர்ச்சியுடன் சூப்பர்வைசராக 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: Finance
காலியிடங்கள்: 1 (UR)
தகுதி : 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.காம்., பி.பி.ஏ., தேர்ச்சியுடன் 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 40,650
வயதுவரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும்.
வயதுவரம்பு சலுகை: உச்ச வயது வரம்பில் எஸ்சி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் Descriptive தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.cochinshipyard.in அல்லது www.udupicsl.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 22.4.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Udupi Cochin Shipyard Limited (UCSL), Malpe in Karnataka State, a wholly owned subsidiary of Cochin Shipyard Limited (CSL) invites Online Applications from Indian citizens for filling up the following Supervisory posts
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.