FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விசாகப்பட்டினத்தில் கடற்படை ஆதரவுக் கப்பல் திட்டங்கள்: ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்!

இந்தியக் கடற்படையின் பலத்தை அதிகரிக்கும் புதிய திட்டங்கள் பற்றி..

ராஜ்நாத் சிங் - PTI
பகிர்:

விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் பல்வேறு புதிய திட்டங்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.

இந்தியக் கடற்படையின் பலத்தைப் பெருக்கும் நோக்கில் உள்நாட்டிலேயே கட்டப்பட உள்ள முதலாவது கடற்படை ஆதரவுக்கப்பல் 1- ன் (fleet support ship-1) கட்டுமானப் பணியையும், அத்துடன் இந்தத் தொடரின் 5-வது கப்பலான கடற்படை ஆதரவுக் கப்பல்கள் 5-க்கான அடித்தளக் கட்டமைப்பு அமைக்கும் பணியையும் அவர் தொடங்கிவைத்தார்.

இவற்றுடன் கப்பல் கட்டும் தளத்தில் மேம்படுத்தப்பட்ட ஸ்லிப்வே 4 மற்றும் 300 டன் எடையைக் கையாளும் திறன் கொண்ட பிரம்மாண்ட கோலியத் கிரேன் ஆகியவற்றையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

Advertisement

Advertisement

மேம்படுத்தப்பட்ட ஸ்லிப்பே 4, அதன் நீட்டிக்கப்பட்ட நீளத்துடனும், கூடுதல் எடை தாங்கும் திறனுடனும் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்லிப்வே மற்றும் க்ரேன் வசதி மூலம் 45,000 டன் வரையிலான பெரிய மற்றும் சிக்கலான போர் மற்றும் கப்பல்களை ஹிந்துஸ்தான் கப்பல் தளத்தில் இனி எளிதாகக் கட்ட முடியும்.

இந்தியக் கடற்படைக்காக பிரத்யேகமாக உருவாக்கப்படும் இந்த 5 கடற்படை ஆதரவுக் கப்பல்களும் தலா 43,500 டன் எடை கொண்டவை. நடுக்கடலில் போரிடும் போர்க்கப்பல்களுக்குத் தேவையான எரிபொருள், உணவு மற்றும் ஆயுதங்களை உடனுக்குடன் வழங்கும் திறன் படைத்தது.

இந்த விழாவில் ஆந்திரம் முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி, பாதுகாப்புத் தளவாட உற்பத்தித்துறை செயலாளர் சஞ்சீவ் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments