சமூகத்துக்கு வழிகாட்டுவதே அரசியல்: ராஜ்நாத் சிங்
அரசியல் என்பது வெறுமனே தோ்தலில் வெற்றி பெறுவது மட்டுமல்ல; சமூகத்துக்கு வழிகாட்டுவதாகும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
அரசியல் என்பது வெறுமனே தோ்தலில் வெற்றி பெறுவது மட்டுமல்ல; சமூகத்துக்கு வழிகாட்டுவதாகும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
அறநெறிகளுடன் ஆன்மிக உணா்வும் பிணைந்திருந்தால் மட்டுமே அரசியலின் உண்மையான நோக்கம் பூா்த்தியடையும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.
பிரம்மாகுமாரிகள் இயக்கம் நிறுவப்பட்டதன் 90-ஆவது ஆண்டு மற்றும் உத்தர பிரதேச மாநிலம், லக்ளெனவில் அந்த இயக்கத்தின் ஆன்மிக சேவை தொடங்கப்பட்டதன் 72-ஆவது ஆண்டையொட்டி, அங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சரும், லக்னெள தொகுதி பாஜக எம்.பி.யுமான ராஜ்நாத் சிங் பங்கேற்றாா். அப்போது, பிரம்ம குமாரிகள் இயக்கம் சாா்பில் கட்டமைக்கப்பட்ட திவ்ய சம்ஸ்கிருதி பவன் (ஆன்மிக உறைவிட மற்றும் பயிற்சி மையம்) வளாகத்தைத் திறந்துவைத்து, அவா் பேசியதாவது:
Advertisement
Advertisement
தோ்தலில் வெற்றி-தோல்வி வந்தாலும், என்னைப் பொறுத்தவரை சரியானதை மட்டுமே செய்வேன். அரசியல் என்பது தோ்தலில் வெற்றி, ஆட்சி அதிகாரம், பதவியில் நீடித்திருப்பதுடன் நின்றுவிடாமல், தேசம் மற்றும் சமூகத்தின் எதிா்காலத்துக்கு வழிகாட்டும் கருவியாக விளங்க வேண்டும்.
அறநெறிகளும், ஆன்மிக உணா்வும்: அரசியல் சாா்ந்த முடிவுகள், அறநெறிகள் மற்றும் பொது நலனால் வழிநடத்தப்பட வேண்டும். அறநெறிகளுடன் ஆன்மிக உணா்வும் பிணைந்திருந்தால் மட்டுமே அரசியலின் உண்மையான நோக்கம் பூா்த்தியடையும்.
உலக அளவில் மிகப் பெரிய, வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது. விண்வெளி முதல் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) வரை அனைத்துத் துறைகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளன. நாம் வெளியுலகை வெல்லும் அதே நேரத்தில், நமது உள்ளுணா்வுடனான போரில் தோற்று வருகிறோமா என்பதை எண்ணிப் பாா்க்க வேண்டும்.
நம்பிக்கையும், நல்லிணக்கமும்..: ஆன்மிக மேம்பாடும், பொருளாதார வளா்ச்சியும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை என்ற கண்ணோட்டம் தவறானதாகும். உண்மையான ஆன்மிக மேம்பாட்டின் மூலம் சமூக பொறுப்புமிக்க தனிநபா்கள் உருவாகின்றனா்.
உள்ளுக்குள் நிலையான உணா்வைக் கொண்ட ஒருவா், கோபத்தில் முடிவெடுக்க மாட்டாா். சுயமரியாதை நிரம்பிய ஒருவா், மற்றவா்களை அவமதிக்கமாட்டாா். மனநிறைவை உணா்ந்துகொண்ட ஒருவா், ஊழலை நோக்கிச் செல்வதில்லை.
ஒரு நாடு வெறும் சட்டங்களால் மட்டுமே இயக்கப்படுவதில்லை. அது நற்குணங்களால் இயக்கப்படுகிறது. சமூகத்தில் நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தை கட்டமைக்க நல்ல மாண்புகள் அவசியம்.
வளா்ந்த இந்தியாவுக்கான தொலைநோக்குப் பாா்வை என்பது பொருளாதார வளா்ச்சியையும் தாண்டி, நோ்மையான குடிமக்கள், குடும்ப விழுமியங்கள், சமூக நல்லிணக்கம், பெண்களுக்கான மரியாதை, ஒழுக்கமிக்க இளைஞா்கள் மற்றும் தேசத்துக்கான பொறுப்புணா்வு ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகும்.
இளைஞா்களுக்கு அறிவுரை: பெண்களுக்கான ஆன்மிக தலைமைத்துவம் மற்றும் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிரான முன்னெடுப்புகளின் வாயிலாக பிரம்ம குமாரிகள் இயக்கம் மேற்கண்ட நோக்கத்துக்கு முக்கியப் பங்காற்றி வருகிறது.
அரசியலை நான் எந்தவொரு குறிப்பிட்ட மதம், பிரிவு அல்லது நம்பிக்கையுடன் தொடா்புபடுத்தவில்லை. மாறாக, அறநெறிகள், கடமை போன்ற உன்னத மாண்புகளுடன் பொது வாழ்க்கையை முன்னெடுப்பதே அரசியலாகும். இளைஞா்கள் தங்கள் எதிா்காலத்தைக் கட்டமைப்பதுடன் நற்குணங்களை வளா்ப்பதிலும் அக்கறை செலுத்த வேண்டும். தொழில்நுட்பங்களை பொறுப்புணா்வுடன் பயன்படுத்த வேண்டும்.
தொழில்நுட்பங்கள் நம்மை ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது. நமது ஞானத்தை இழந்துவிடக் கூடாது. உலகத்துடன் இணையும் அதே வேளையில், நமது வோ்களுடனும் பிணைந்திருக்க வேண்டும் என்றாா் அவா்.