ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்
ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டத்தின் துகராஜபட்டினத்தில் ரூ.15,000 கோடி முதலீட்டில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக மஸகான் டாக் கப்பல் கட்டும் நிறுவனம் (எம்டிஎல்) ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டத்தின் துகராஜபட்டினத்தில் ரூ.15,000 கோடி முதலீட்டில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக மஸகான் டாக் கப்பல் கட்டும் நிறுவனம் (எம்டிஎல்) ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ஆந்திர மாநில அரசு, விசாகப்பட்டின துறைமுகத்தின் கூட்டு கப்பல் கட்டும் நிறுவனமான ‘என்ஷிப்-ஏபி’ மற்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் பொதுத் துறை நிறுவனமான எம்டிஎல் ஆகியவற்றுக்கு இடையேயான இந்த ஒப்பந்தம், ஆந்திர முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு முன்னிலையில் வெள்ளிக்கிழமை கையொப்பமானது.
இந்த ஒப்பந்தத்தின்கீழ், துகராஜபட்டினத்தில் துறைமுகத்துடன் கூடிய கப்பல் கட்டும் மையத்தை உருவாக்கத் திட்டமிட்டப்பட்டுள்ளது. திட்ட அறிக்கையின்படி, கப்பல் கட்டும் மற்றும் பழுதுபாா்க்கும் தளம் ரூ.29,254 கோடியிலும், துறைமுகம் ரூ.9,513 கோடியிலும் அமையவுள்ளன.
Advertisement
Advertisement
அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட உள்ள இத்திட்டத்தின் வாயிலாக சுமாா் 45,000 பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சா்வதேச தரத்திலான இத்தளத்தை அமைப்பதற்குத் தேவையான நிலம், உள்கட்டமைப்பு மற்றும் சட்டபூா்வ அனுமதிகளை விரைந்து வழங்க ஆந்திர அரசு உறுதியளித்துள்ளது.
முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று, மகாராஷ்டிர மாநிலம் ராய்கட்டில் உள்ள திகே துறைமுகத்தில் ரூ.27,000 கோடி முதலீட்டுடன் நாட்டின் மிகப் பெரிய கப்பல் கட்டும் தளம் அமைக்க, எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
படகேப்சன்....
ஆந்திர முதல்வா் என்.சந்திரபாபு நாயுடுவின் முன்னிலையில் என்ஷிப்-ஏபி மற்றும் எம்டிஎல் நிறுவனங்களுக்கிடையே கையொப்பமான ஒப்பந்தம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.