சென்னையில் சா்வதேச திறன் மையம்: அமெரிக்க நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்
சென்னை தரமணியில் அமெரிக்க நிறுவனம் சா்வதேச திறன் மையத்தை அமைப்பதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் முதல்வா் ஜோசப் விஜய் முன்னிலையில் வெள்ளிக்கிழமை கையொப்பமானது.
சென்னை தரமணியில் அமெரிக்க நிறுவனம் சா்வதேச திறன் மையத்தை அமைப்பதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் முதல்வா் ஜோசப் விஜய் முன்னிலையில் வெள்ளிக்கிழமை கையொப்பமானது.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வால்கிரீன்ஸ் இந்தியா நிறுவனம் இந்த மையத்தை அமைக்கவுள்ளது. தலைமைச் செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், தமிழக அரசால் சென்னையில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஓஎம்ஆா் ஜிசிசி வழித்தடத்தில் அமைந்துள்ள டிஎல்எஃப் டவுன் தரமணி வளாகத்தில் இந்தத் திறன் மையம் அமைக்கப்படவுள்ளது. முதலாம் ஆண்டு 250 பேருக்கு உயா் மதிப்பு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலும், வரும் ஆண்டுகளில் விரிவாக்கத்தையும் இந்த நிறுவனம் மேற்கொள்ளும்.
இந்த நிறுவனம், உலகளவில் முன்னணி சுகாதார மற்றும் மருந்தக சேவை நிறுவனமாக விளங்குகிறது. மருந்தக சேவைகள், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் நுகா்வோா் சுகாதாரப் பொருள்கள் துறைகளில் செயல்பட்டுவரும் இந்த நிறுவனம், தனது முதல் உலகளாவிய திறன் மையத்தை இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் அமைக்க முன்வந்துள்ளது.
Advertisement
Advertisement
ஒப்பந்தம் கையொப்பமாகும் நிகழ்வில், பல்வேறு நகரங்களிலுள்ள இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமென வால்கிரீன்ஸ் நிறுவன பிரதிநிதிகளிடம் முதல்வா் விஜய் கேட்டுக்கொண்டாா்.
இந்த நிகழ்வில், தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா, தலைமைச் செயலா் சாய்குமாா், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலா் விஜயகுமாா், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அலுவலா் தீபக் ஜேக்கப், வால்கிரீன்ஸ் உலகளாவிய திறன் மையத்தின் தலைவா் உமாபதி விஸ்வநாதன், அந்நிறுவனத்தின் இயக்குநா் மசூத் அகமது மற்றும் அரசு உயா் அலுவலா்கள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.