FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் அறிமுகம்: என்னென்ன ஸ்பெஷல்?

பிஎம்டபிள்யூ நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 7 சீரிஸ் கார்கள் பற்றி..

16 செப்டம்பர் 2026, 4:32 pm IST
பகிர்:

சொகுசு கார்களில் ஒன்றான பிஎம்டபிள்யூ நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 7 சீரிஸ் மற்றும் i7 எலெக்ட்ரிக் சொகுசு செடான் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆடம்பரக் கார் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம், தனது வரிசையில் 7 சீரிஸ் எனும் புதிய ரகக் காரை அறிமுகப்படுத்தியது.

இந்தியாவில் தற்போது பெட்ரோல் என்ஜின் கொண்ட 740 வேரியண்ட் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. முந்தைய டீசல் மாடல் நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

7 சீரிஸின் சிறப்பம்சங்கள்

புதிய 7 சீரிஸின் முன்பகுதி கணிசமாக மாற்றப்பட்டடுள்ளது. புதிய ஸ்பிளிட் எல்இடி ஹெட்லைட்கள், மெலிதான பகல்நேர விளக்குகள், ஒளிரும் பெரிய கிரில் மற்றும் புதிய பம்பர் ஆகியவை கம்பீரமான தோற்றத்தை வழங்குகின்றன.

20 அங்குல அலாய் வீல்கள் நிரந்திரமாக வழங்குகின்றன. 222 அங்குல வீல்களையும் தேர்வு செய்யலாம். உள்புறத்தில் 17.9 அங்குல இன்போடெயின்மென்ட் திரை, 14.6 அங்குல முன்பக்க பயணிக்கான திரை மற்றும் டேஷ்போர்டு முழுவதும் நீளம் பனோரமிக் விஷன் டிஸ்பிளே ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இது மணிக்கு 100 கி. மீட்டர் வேகத்தை 5.4 விநாடிகளில் எட்டும் திறன் கொண்டது. மற்றும் இதன் வேகம் மின்னணு முறையில் 250 கிலோமீட்டர்களாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

i7 சிறப்பம்சங்கள்

இந்தியாவிற்கான i7 சீரிசில் மிக முக்கியமான புதிய வரவு, 680 ஹெச்பி பவர் மற்றும் 1100Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் இரட்டை இன்ஜின்களைக் கொண்ட புதிய M70*drive வேரியண்ட் ஆகும். WLTP அடிப்படையில் 686 கி.மீ தூரம் செல்லும் திறன் கொண்டுள்ளது.

3.8 நொடிகளில் மணிக்கு 100 கி.மீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது. i7 edrive50 மாடலில் மேம்படுத்தப்பட்ட 112.5kwh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments