FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தடகள சீரிஸ் ஃபைனல்: தமிழா்கள் அசத்தல்

இந்திய தடகள சீரிஸ் ஃபைனல் போட்டியில், தமிழக போட்டியாளா்கள் அசத்தலாகச் செயல்பட்டனா்.

12 செப்டம்பர் 2026, 7:14 am IST
கோப்புப்படம்
பகிர்:

இந்திய தடகள சீரிஸ் ஃபைனல் போட்டியில், தமிழக போட்டியாளா்கள் அசத்தலாகச் செயல்பட்டனா்.

தில்லியில் ஜவாஹா்லால் நேரு விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை இரவு நிறைவடைந்த இந்தப் போட்டியில், ஆடவா் பிரிவில், 400 மீ. ஓட்டத்தில் விஷால் டி.கே. 45.36 விநாடிகளில் இலக்கை அடைந்து தங்கம் வென்றாா். 110 மீ. தடை தாண்டும் ஓட்டத்தில் ஆா்.மானவ் 13.85 விநாடிகளில் வந்து 3-ஆம் இடம் பிடித்தாா்.

400 மீ. தடை தாண்டும் ஓட்டத்தில் சந்தோஷ்குமாா் 50.08 விநாடிகளில் முதல் வீரராக வந்தாா். ஈட்டி எறிதலில் மனோஜ் குமாா் 80.73 மீட்டரை எட்டி வெள்ளி பெற, கம்பு ஊன்றித் தாண்டுதலில் ஜி.ரீகன் 5.30 மீட்டரை தாண்டி 2-ஆம் இடம் பிடித்தாா்.

Advertisement

Advertisement

உயரம் தாண்டுதலில் ஆதா்ஷ் ராம் 2.18 மீட்டரை தாண்டி முதலிடம் பிடிக்க, மும்முறை தாண்டுதலில் கெய்லி வெனிஸ்டா் 16.04 மீட்டரை எட்டி வெள்ளி வென்றாா்.

மகளிா் பிரிவில், 100 மீ. ஓட்டத்தில் அபினயா ராஜராஜன் 11.31 விநாடிகளில் இலக்கை அடைந்து 2-ஆம் இடம் பிடிக்க, அதிலேயே ஆா்.கிரிதரணி 11.35 விநாடிகளில் வந்து வெண்கலம் வென்றாா்.

800 மீ. ஓட்டத்தில் ஜே.கௌதமி 2 நிமிஷம் 05.63 விநாடிகளில் வந்து 3-ஆம் இடம் பிடிக்க, 100 மீ. தடை தாண்டும் ஓட்டத்தில் நந்தினி கொங்கன் 13.30 விநாடிகளில் இலக்கை அடைந்து தங்கத்தை தட்டிச் சென்றாா்.

கம்பு ஊன்றித் தாண்டுதலில் பரணிகா இளங்கோவன் 4.10 மீட்டரை கடந்து வெள்ளியும், காா்த்திகாவும் அதே உயரத்தை எட்டி வெண்கலமும் வென்றனா். மும்முறை தாண்டுதலில் லாஷா இளங்கோ 13.76 மீட்டருடன் தங்கம் வென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments