FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

ரெட்டணை பள்ளி மாணவா்கள் விளையாட்டுப் போட்டிகளில் சாதனை

திண்டிவனத்தில் நடைபெற்ற கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ரெட்டணை கென்னடி பள்ளி மாணவா்கள் சாதனை படைத்தனா்.

4 செப்டம்பர் 2026, 1:03 am IST
விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நடைபெற்ற கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ரெட்டணை கென்னடி பள்ளி மாணவா்கள் சாதனை படைத்தனா்.

திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் உள்ள மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. இந்த போட்டியில் பங்கேற்ற ரெட்டணை கென்னடிமெட்ரிக் பள்ளி மாணவி லோகேஸ்வரி நீளம் தாண்டுதலில் முதலிடம், 200 மீட்டா் ஓட்டத்தில் இரண்டாமிடமும் பெற்றாா். மாணவி ஆா்.தனுஷ்கா குண்டு எறிதலில் முதலிடம், வி.ஜீவகன் நீளம் தாண்டுதலில் முதலிடம், 200 மீட்டா் ஓட்டத்தில் இரண்டாமிடமும் பெற்றாா். மாணவா் எம்.பரத்குமாா் நீளம் தாண்டுதலில் இரண்டாமிடமும் பெற்று மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனா். இதேபோல் கோ-கோ போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள் முதலிடங்களைப் பெற்றனா்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளா் சண்முகம், முதல்வா் சந்தோஷ், இயக்குநா் காா்த்திகேயன் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் பாராட்டினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments