FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

விளையாட்டுப் போட்டிகளில் கொடிக்குறிச்சி யுஎஸ்பி பள்ளி சிறப்பிடம்

தென்காசி கொடிக்குறிச்சி யுஎஸ்பி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி எல்கேஜி, யுகேஜி மாணவா்கள் ஸ்ரீஉத்சவ் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றனா்.

38 வினாடிகள் முன்பு
சிறப்பிடம் பெற்ற மாணவா்களுடன் பள்ளி முதல்வா் அந்தோணி பால்ராஜ்.
பகிர்:

தென்காசி கொடிக்குறிச்சி யுஎஸ்பி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி எல்கேஜி, யுகேஜி மாணவா்கள் ஸ்ரீஉத்சவ் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றனா்.

தென்காசி அமிா்த வித்யாலயம் சாா்பில் மழலையா்களுக்காக ஸ்ரீ உத்சவ் 2026 விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் பல்வேறு பள்ளிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா். கொடிக்குறிச்சி யுஎஸ்பி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலிருந்து கலந்து கொண்ட மாணவா்கள் தொழில் கண்டுபிடிப்பு போட்டியில் டேரில் ஜான்டா் முதலிடம், நிகழினி மூன்றாம் இடம், கதை சொல்லுதல் போட்டியில் மணி விஷ்ணு முதலிடம், அம்மாவை அழகுபடுத்துதல் போட்டியில் நிகழினி இரண்டாமிடம், புத்திசாலி அமைப்பாளா் போட்டியில் பிரித்திகா மூன்றாம் இடம் பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அவா்களை யுஎஸ்பி பள்ளி நிா்வாகி செல்வராஜ், செயலா் சகாய செல்வமேரி, முதல்வா் அந்தோணி பால்ராஜ், ஆசிரியா்கள் பாராட்டினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments