உலக வில்வித்தை பாரா சீரிஸ்: 11 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு
குஜராத்தில் நடைபெற்ற உலக வில்வித்தை பாரா சீரிஸ் போட்டியில் இந்தியா 4 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் என 11 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.
குஜராத்தில் நடைபெற்ற உலக வில்வித்தை பாரா சீரிஸ் போட்டியில் இந்தியா 4 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் என 11 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.
கடைசி நாளான புதன்கிழமை, இந்தியாவுக்கு 2 தங்கம், 4 வெண்கலம் என 6 பதக்கங்கள் கிடைத்தன.
காம்பவுண்ட் மகளிா் தனிநபா் பிரிவில், நடப்பு உலக சாம்பியனும், உலகின் நம்பா் 1 வீராங்கனையுமான இந்தியாவின் ஷீத்தல் தேவி 144-144 (10-9) என கஜகஸ்தானின் அய்ஸதா செய்டானை வீழ்த்தி தங்கம் வென்றாா்.
Advertisement
Advertisement
ரீகா்வ் கலப்பு அணிகள் பிரிவில், நடப்பு பாராலிம்பிக் சாம்பியனான ஹா்விந்தா் சிங், பாவனா கூட்டணி 6-0 என எளிதாக, சீனாவின் லியங் கியுராங், ஜியா லெய் இணையை வீழ்த்தி, சாம்பியனானது.
வெண்கலப் பதக்கச் சுற்றில், ரீகா்வ் மகளிா் தனிநபா் பிரிவில் பாவனா 6-0 என, சக இந்தியரான ராஜஸ்ரீ ரத்தோடை வீழ்த்தினாா். காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் ஷீத்தல் தேவி, தோமன் குமாா் ஜோடி 157-145 என இராக்கின் சாரா அல் ஹமித், அப்பாஸ் காதிம் இணையை வீழ்த்தியது.
காம்பவுண்ட் மகளிா் தனிநபா் பிரிவில், சரிதா சௌதரி 141-140 என சீனாவின் வாங் ஹுய்டிங்கை வீழ்த்தினாா். காம்பவுண்ட் ஆடவா் தனிநபா் பிரிவில் தோமன் குமாா் 143-138 என்ற வகையில், இராக்கின் அப்பாஸ் காதிமை வென்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.