குண்டு எறிதல்: ஒரே பிரிவில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்ற இந்தியர்கள்!
ஆசிய பாரா விளையாட்டில் ஒரே பிரிவில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்ற இந்தியர்கள் குறித்து...
ஆசிய பாரா விளையாட்டில் எஃப் 46 குண்டு எறிதல் பிரிவில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என அனைத்தையும் இந்திய வீரர்கள் வென்று சாதனை படைத்துள்ளார்கள்.
இந்திய வீரர் சச்சின் கிலாரி குண்டு எறிதலில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இவர் முன்னதாக 2024 பாரீஸ் பாராலிம்பிக்ஸில் குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.
ஜப்பானின் அயிச்சி நகோயாவில் ஆசிய பாரா போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கின. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
Advertisement
Advertisement
ஆடவருக்கான குண்டு எறிதலில் எஃப் 46 பிரிவில் இந்திய வீரர் சச்சின் சர்ஜெராவ் கிலாரி தனது கடைசி முயற்சியில் அதிகபட்ச தூரமான 15.87 மீட்டருக்கு எறிந்து, தங்கம் வென்றார்.
முன்னதாக இந்தப் பிரிவில் 15.67 மீட்டருக்கு குண்டு எறிந்ததே முதலிடத்தில் இருந்தது. தற்போது இந்த சாதனை இந்தியரால் முறியடிக்கப்பட்டுள்ளது.
மற்றுமொரு இந்திய வீரர் முகமது யாசீர் தனது மூன்றாவது முயற்சியில் 15.67 மீட்டருக்கு குண்டு எறிந்து வெள்ளி வென்றார். மற்றுமொரு இந்தியர் பிரவின் 14.94 மீட்டருக்கு எறிந்து வெண்கலம் வென்றார்.
மூன்று பதக்கங்களையும் இந்தியர்களே வென்று அசத்தியுள்ளார்கள். F46 பிரிவு என்பது, முழங்கைக்கு மேலேயோ அல்லது கீழேயோ ஒற்றை உறுப்பு நீக்கம் செய்யப்பட்ட, அல்லது அதற்கு இணையான மேற்கை குறைபாடு உள்ள தடகள விளையாட்டு வீரர்களுக்கானது.
இவர்கள் நேராக நின்றுகொண்டு தங்களது இடுப்பு மற்றும் கால்களின் மூலமாக ஆற்றலைப் பயன்படுத்தி குண்டு எறிவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்துடன் இந்தியாவுக்கு 12 தங்கம், 17 வெள்ளி, 18 வெண்கலம் வென்றுள்ளன. மொத்தமாக 47 பதக்கங்களுடன் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கின்றன.
Sachin Khilari leads 1-2-3 finish for India in men's shot put F46 event
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.