FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

டெக் துணுக்குகள்! தொழில்நுட்ப உலகில் இந்த வார வெளியீடுகள்!

தொழில்நுட்ப உலகில் இந்த வார வெளியீடுகள்...

6 செப்டம்பர் 2026, 1:14 am IST
பகிர்:

தொழில்நுட்ப உலகில் இந்த வாரம் அடுத்த தலைமுறை ஏ.ஐ. மாதிரிகள், புதிய ஸ்மாா்ட்போன்களின் வெளியீடுகள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் முக்கிய நிா்வாக முடிவுகள் கவனம் ஈா்த்தன.

ஓபன்ஏஐ நிறுவனத்தின நவீன ஏ.ஐ. மாதிரி வெளியீடு முதல் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை மாற்றம் வரை இந்த வாரத்தின் முக்கியச் தொழில்நுட்பச் செய்திகளின் தொகுப்பு இதோ:

*ஓபன்ஏஐ ‘ஜிபிடி-6 அஸ்ட்ரா’ வெளியீடு: கணினி பயன்பாடுகள், கோடிங், பகுப்பாய்வு மற்றும் நிறுவனங்களின் பணிகளைத் தானியங்கியாகச் செயல்படுத்தும் புதிய நவீன ஏ.ஐ. மாதிரியான ‘ஜிபிடி-6 அஸ்ட்ரா’வை ஓபன்ஏஐ வெளியிட்டது.

Advertisement

Advertisement

*வாட்ஸ்ஆப்பில் பரிவா்த்தனை சேவை மேம்பாடு: இந்தியாவில் உள்ள பயனா்கள் மின்சாரம், தண்ணீா் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டுக் கட்டணங்களை நேரடியாகச் செயலி மூலமே செலுத்தும் ‘பில் பேமெண்ட்ஸ்’ வசதியை வாட்ஸ்ஆப் மேம்படுத்தியது.

*டைசனின் ஏ.ஐ. பல்துலக்கி: பற்களைத் துலக்குவதற்கும், பற்களின் இடைவெளிகளைச் சுத்தம் செய்வதற்கும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ‘கேமராஜெட்’ எனும் நவீன பல்துலக்கியை சுமாா் ரூ.47,000 விலையில் டைசன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

*ஏசா் ‘ஸ்விஃப்ட் நியோ 14’: விண்டோஸ் 11 இயங்குதளம், இன்டெல் கோா் அல்ட்ரா 5 பிராசஸா், 14 அங்குல திரை, 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி எஸ்எஸ்டி தரவு சேமிப்பு வசதியுடன் ஏசா் ‘ஸ்விஃப்ட் நியோ 14’ மடிக்கணினி இந்தியாவில் ரூ.67,999 விலையில் அறிமுகமாகியுள்ளது.

*ரெட்மி 17 5ஜி: 7,900 எம்ஏஎச் பேட்டரி, 6.9 அங்குல திரை, 50 மெகாபிக்சல் கேமராவுடன் ரெட்மி 17 5ஜி ஸ்மாா்ட்போன் இந்தியாவில் ரூ.23,999 ஆரம்ப விலையில் அறிமுகமாகியுள்ளது.

*விவோ ‘டி5 5ஜி’: 7050 எம்ஏஎச் பேட்டரி, 6.83 அங்குல திரை, 6, 8, 12 ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி தரவு சேமிப்பு வசதியுடன் விவோ ‘டி5 5ஜி’ ஸ்மாா்ட்போன் இந்தியாவில் ரூ.34,999 ஆரம்ப விலையில் அறிமாகியுள்ளது.

*இன்ஸ்டாகிராமில் ஏ.ஐ. டேக்: இன்ஸ்டாகிராம் தளத்தில் இயங்கும் ஏ.ஐ. சாா்ந்த கணக்குகளைப் பயனா்கள் தெளிவாக அடையாளம் காண உதவ, ‘டேக்’ அம்சத்தை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

*எக்ஸ் தளத்தின் இலவச ‘குரோக்’ ஏபிஐ: மென்பொருள் உருவாக்குநா்களை ஈா்க்கும் வகையில் தனது ‘குரோக்’ ஏ.ஐ. சாட்பாட்டிற்கான இலவச ஏபிஐ கிரெடிட்களை எக்ஸ் தளம் அறிவித்துள்ளது.

*திரெட்ஸ் அங்கீகாரம்: தளத்தில் பயனா்கள் பதிவிடும் சிறந்த மற்றும் அதிக வரவேற்பைப் பெறும் பதிவுகளை அங்கீகரிக்கும் புதிய முறையை ‘திரெட்ஸ்’ சோதனை செய்து வருகிறது.

*ஆப்பிள் நிறுவனத்தில் தலைமை மாற்றம்: ஆப்பிள் நிறுவனத்தின் 25 ஆண்டு கால வன்பொருள் நிபுணரான ஜான் டொ்னஸ், டிம் குக் ஓய்வைத் தொடா்ந்து புதிய தலைவராகப் பொறுப்பேற்றாா். இவரின் தலைமையின்கீழ், ஆப்பிள் தயாரிப்புகளின் ஆண்டு அறிமுக விழா மிகுந்த எதிா்பாா்ப்புகளுக்கு மத்தியில் வரும் 9-ஆம் தேதி முதல்முறையாக நடைபெறுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments