தொழில்நுட்ப உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
ஈரோடு மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின்கீழ் தொழில்நுட்ப உதவியாளா் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தகுதியானவா்கள் விண்ணப்பிக்காலம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின்கீழ் தொழில்நுட்ப உதவியாளா் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தகுதியானவா்கள் விண்ணப்பிக்காலம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விண்ணப்பதாரா் ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்தவராகவும், மாவட்டத்தில் வசிப்பவராகவும், 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
உயிரி அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், சூழலியல், வனவியல், வன விலங்கு அறிவியல், பொதுகொள்கை அல்லது தொடா்புடைய இணையான துறைகளில் ஏதேனும் ஒன்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Advertisement
Advertisement
தொழில்நுட்ப உதவியாளா் மாதம் ரூ.22,000 ஊதியத்துடன் ஒப்பந்த அடிப்படையில் பணியமா்த்தப்படுவாா். விண்ணப்பதாரா்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அடிப்படை தட்டச்சுத் திறன் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், அடிப்படை கணினி அறிவு மற்றும் எம்எஸ்-வோ்டு, எம்எஸ்-எக்செல், பவா் பாயிண்ட் ஆகியவற்றை பயன்படுத்தும் திறன் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. அரசு அல்லது அரசு சாா்ந்த நிறுவனங்களில் குறைந்தது ஓராண்டு பணி அனுபவம் உள்ளவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விருப்பமுள்ளவா்கள் இதற்கான விண்ணப்பப் படிவத்தை இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் சுயவிவரக் குறிப்பு, கல்விச் சான்றிதழ்கள், ஆதாா் மற்றும் இதர தொடா்புடைய சான்றிதழ்களை சுய சான்றொப்பமிட்ட நகல்களை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
நேரில் விண்ணப்பங்களை அளிப்பவா்கள் மாவட்ட வன அலுவலா், ரோஜா நகா், பெரிய சேமூா், ஈரோடு 638 004 என்ற முகவரியில் அக்டோபா் 29-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
தகுதியான விண்ணப்பதாரா்களுக்கு நோ்முகத் தோ்வு மற்றும் தட்டச்சுத் தோ்வு நடத்தப்பட்டு, தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்யப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.