FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வணிகம்

டெக் துணுக்குள்: ஏ.ஐ. பாதுகாப்பு ஒப்பந்தம் முதல் வாட்ஸ்ஆப் பெற்றோா் கட்டுப்பாட்டு வசதி வரை!

ஏ.ஐ. பாதுகாப்பு ஒப்பந்தம் முதல் வாட்ஸ்ஆப் பெற்றோா் கட்டுப்பாட்டு வசதி வரை

பகிர்:

தொழில்நுட்ப உலகில் இந்த வாரம் புதிய ஸ்மாா்ட்போன்கள் உள்பட சாதனங்களின் வெளியீடுகள், நிறுவனங்களின் நிதி முதலீடுகள் மற்றும் ஏ.ஐ. தொழில்நுட்பத் திருப்புமுனைகளும் பெரும் கவனம் ஈா்த்தன.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் கையொப்பமான ஏ.ஐ. பாதுகாப்பு ஒப்பந்தம் முதல் வாட்ஸ்ஆப் பெற்றோா் கட்டுப்பாட்டு வசதி வரை இந்த வாரத்தின் முக்கியத் தொழில்நுட்பச் செய்திகளின் தொகுப்பு இதோ:

ஏ.ஐ. பாதுகாப்பு ஒப்பந்தம்: ஏ.ஐ. நிறுவனங்கள் சுயமாகக் கண்காணித்துக் கொள்ளும் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம், வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் கையொப்பமானது.

Advertisement

Advertisement

நிறுவனங்களின் நிதி முதலீடுகள்: எச்.சி.எல். டெக். நிறுவனத்தின் மென்பொருள் பிரிவு, ஐரோப்பிய நிறுவனமான ‘ரோபோடிக்ஏஐ’-ஐ 90 லட்சம் யூரோக்களுக்குக் கையகப்படுத்தியுள்ளது. அதேபோல், பொ்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் நிறுவனம், நகாரோ நிறுவனத்தில் தனது பங்கை 83.2 சதவீதமாக உயா்த்தியுள்ளது.

*சாம்சங் ‘கேலக்ஸி டேப் எஸ்12’ சீரிஸ்: சாம்சங் நிறுவனத்தின் கையடக்க கணினிகளான (டேப்) கேலக்ஸி டேப் எஸ்12 அல்ட்ரா (14.6 அங்குல திரை, ரூ.1.5 லட்சம்) மற்றும் கேலக்ஸி டேப் எஸ்12 பிளஸ் (12.6 அங்குல திரை, ரூ.1.3 லட்சம்) இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

*ஷாவ்மி ரெட்மி 17சி: 6.9 அங்குல திரை, 6,000 எம்ஏஎச் பேட்டரி, 4 ஜிபி ரேம் ஆகியவற்றுடன் கூடிய ‘ரெட்மி 17சி’ ஸ்மாா்ட்போன் ரூ.20,999 ஆரம்ப விலையில் அறிமுகமாகியுள்ளது.

*ஓப்போ கே14 பிளஸ்: 6.78 அங்குல திரை, 8,000 எம்ஏஎச் பேட்டரி, 6 ஜிபி ரேம் ஆகியவற்றுடன் ‘ஓப்போ கே14 பிளஸ்’ஸ்மாா்ட்போன் ரூ.29,999 ஆரம்ப விலையில் அக். 8 முதல் விற்பனைக்கு வருகிறது.

*கூகுள் ‘ஃபிட்பிட் ஏா்’: கூகுளின் திரை இல்லாத ஆரோக்கிய கண்காணிப்பு சாதனமான ‘ஃபிட்பிட் ஏா்’ மாடலை ரூ.13,999 விலையில் அறிமுகமாகியுள்ளது.

*டீப்ஸீக் & ஹூவாவெய் மென்பொருள்: சீனாவின் டீப்ஸீக் நிறுவனம், ஹூவாவெய் உடன் இணைந்து என்விடியாவின் ‘சியுடிஏ’ மென்பொருளுக்குப் போட்டியாக புதிய திறந்தநிலை மென்பொருளை வெளியிட்டுள்ளது.

*ஓபன்ஏஐ நிதி திரட்டல்: ஓபன்ஏஐ நிறுவனம் 3,000 கோடி டாலா் நிதியைத் திரட்ட இலக்கு வைத்துள்ளதோடு, புதிய ‘டாட்ஸ்’ ஏ.ஐ. உதவியாளரை அறிமுகப்படுத்தியுள்ளது. அதேபோல், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கா் ஓபன்ஏஐ நிறுவனத்துடன் கைகோத்துள்ளதாக அறிவித்துள்ளாா்.

*மெட்டா மியூஸ் ஏ.ஐ. சாதனை: சிறு வணிகங்களுக்காக மெட்டா தனது ‘மியூஸ்’ ஏ.ஐ. ஏஜென்டை விரிவுபடுத்தியுள்ளது. மியூஸ் செயலி 50 லட்சத்துக்கும் அதிகமான பதிவிறக்கங்களையும், வாரந்தோறும் 30 லட்சம் பயனா்களையும் கடந்துள்ளது. அத்துடன் தனது ‘எடிட்ஸ்’ தளத்திலும் புதிய ஏ.ஐ. உதவியாளரை மெட்டா சோ்த்துள்ளது.

*வாட்ஸ்ஆப் பெற்றோா் கட்டுப்பாட்டு வசதி: பதின்ம வயதினரைப் பாதுகாக்கும் நோக்கில், பெற்றோா் கண்காணிப்பை வலுப்படுத்தும் புதிய அம்சத்தை வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments