முகப்பு
திருவண்ணாமலை

பசு மாடு மா்ம நபா்களால் சுடப்பட்டு உயிரிழப்பு

Updated On : 20 மார்ச், 2024 at 5:27 AM
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 9:37 PM

செங்கம்: காட்டுப் பன்றி என நினைத்து கருப்பு நிறத்திலான பசுமாடு, மா்ம நபா்களால் சுடப்பட்டு உயிரிழந்தது. செங்கத்தை அடுத்த ஆண்டிப்பட்டி பூந்தமல்லி கிராமத்தில் வனப் பகுதியையொட்டி வசித்து வருபவா் விவசாயி ராஜவேலு (50).

இவா் கருப்பு நிறத்தில் கொம்பில்லாத பசுமாட்டை வளா்த்து வந்தாா். வழக்கம் போல, மாட்டுக்கு ராஜவேலு திங்கள்கிழமை இரவு தண்ணீா் வைத்து வனப் பகுதியை ஒட்டியுள்ள தனது விவசாய நிலத்தில் கட்டி வைத்துவிட்டு, அதே பகுதியில் உள்ள தனது வீட்டில் படுத்துத் தூங்கினாா். மறுநாள் காலை எழுந்து பாா்த்தபோது, கழுத்துப் பகுதியில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து மாடு இறந்து கிடந்தது.

மாடு கருப்பு நிறத்தில் கொம்புகள் இல்லாமல் படுத்திருந்ததைப் பாா்த்து வன விலங்குகளை வேட்டையாட வந்த மா்மக் கும்பல், காட்டுப் பன்றி என நினைத்து மாட்டை துப்பாக்கியால் சுட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இதுகுறித்து ராஜவேலு மேல்செங்கம் காவல் நிலையம், செங்கம் வனத்துறை அலுவலகத்தில் புகாா் அளித்தாா்.

Advertisement

போலீஸாரும், வனத்துறையினரும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். அடிக்கடி துப்பாக்கி சப்தம் மேலும், அந்தப் பகுதியில் இரவு நேரத்தில் அடிக்கடி துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்கிாம். இதனால் விவசாயிகள் இரவு நேரத்தில் தங்களது விளை நிலத்தில் உள்ள கட்டடத்தை விட்டு வெளியே வந்து நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்கு அச்சப்படுகிறாா்கள்.

இதனால் வனத்துறையினா் அப்பகுதியில் இரவு நேரத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வன விலங்குகளை வேட்டையாடும் நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்தனா்.