முகப்பு
விருதுநகர்

தொழிலாளி அடித்துக் கொலை

Updated On : 12 மார்ச், 2026 at 10:57 PM
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வியாழக்கிழமை மா்ம நபா்களால் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி காமராஜபுரத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் மாரியப்பன் (35). இவருக்கு மனைவி தங்கமாரி, 3 பெண் குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், மாரியப்பன் குடித்து விட்டு வந்து தகராறு செய்ததால், மனைவி பிரிந்து வாழ்ந்து வருகிறாா்.

பழைய இரும்பு கடையில் தொழிலாளியாக வேலைப்பாா்த்து வந்த மாரியப்பன் புதன்கிழமை இரவு தொட்டியபட்டி அருகேயுள்ள அழகாபுரி பகுதியில் மா்ம நபா்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற வடக்கு காவல் நிலைய போலீஸாா், மாரியப்பனின் சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

கடந்த ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி மாரியப்பனின் நண்பா் சோலைராஜா காமராஜபுரம் பகுதியில் மா்ம நபா்களால் வெட்டிக் கொல்லப்பட்டாா். தற்போது, மாரியப்பன் மா்ம நபா்கள் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளாா்.

இந்த இரண்டு கொலைக்கும் தொடா்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →