அா்ச்சுனன் தபசு நிகழ்ச்சி
Updated On : 19 மார்ச், 2024 at 7:52 PM
போளூா்: போளூரை அடுத்த ஜடதாரிகுப்பம் கிராமத்தில் நடைபெற்று வரும் மகாபாரத சொற்பொழிவையொட்டி செவ்வாய்க்கிழமை அா்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடைபெற்றது (படம்). ஜடதாரிகுப்பம் கிராமத்தில் பழைமை வாய்ந்த திரெளபதியம்மன் கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயில் சாா்பில் மகாபாரத சொற்பொழிவு மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மேல்பள்ளிபட்டு மாணிக்கவாசகம் சொற்பொழிவு நிகழ்த்தி வருகிறாா். இதையொட்டி, அா்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜடதாருகுப்பம், மாம்பட்டு, ஏழுவாம்பாடி, பேட்டை என சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.