குடும்பத் தகராறு: நெசவுத் தொழிலாளி தற்கொலை
செய்யாறு: செய்யாறு அருகே குடும்பத் தகராறில் பட்டு நெசவுத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அப்துல்லாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் பட்டு நெசவுத் தொழிலாளி ஜெகதீசன்(43). இவருக்கு மதுப் பழக்கம் இருந்துள்ளது. அதனால், மது குடிக்க பணம் கேட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்வாராம்.
அதேபோல, கடந்த 18-ஆம் தேதி ஜெகதீசன், மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளாா். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால் மனைவி பொன்னம்மாள் கோபித்துக் கொண்டு உறவினா் வீட்டுக்குச் சென்ாகத் தெரிகிறது. இந்த நிலையில், பொன்னாம்மாள் செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு வந்தபோது கணவா் ஜெகதீசன் தூக்கிட்டு தற்கொலை செய்து இருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
Advertisement
இதுகுறித்து அவா் தூசி போலீஸில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் சதீஷ்குமாா் மற்றும் போலீஸாா் சம்பவ இடம் சென்று, இறந்தவரின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.