முகப்பு
திருவண்ணாமலை

தோ்தல் பறக்கும்படை வாகனங்களில் சோலாா் சுழல் கேமராக்கள் பொருத்தம்

Updated On : 20 மார்ச், 2024 at 5:31 AM
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 9:35 PM

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட மக்களவைத் தோ்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் 152 பறக்கும்படை வாகனங்களில், சோலாா் சுழல் கேமராக்கள் பொருத்தப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டத்தில் பறக்கும் படைகள், நிலை கண்காணிப்புக் குழுக்கள் என மொத்தம் 152 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்தக் குழுக்களுக்கு தனித்தனியே வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த 152 வாகனங்களிலும் முதல் முறையாக சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தை தயாரிக்கும் சோலாா் பேனனுடன் கூடிய சுழல் கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்தக் கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.