முகப்பு
திருவண்ணாமலை

தூய்மைப் பணியாளா்களுக்கு யோகா பயிற்சி

Updated On : 3 மே, 2024 at 5:25 PM
பகிர்:

வந்தவாசி நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கான யோகா பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தூய்மைப் பணியாளா்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் நடைபெற்ற பயிற்சிக்கு, நகராட்சி மேலாளா் ஜி.ரவி தலைமை வகித்தாா். செஞ்சிலுவை சங்கச் செயலா் பா.சீனிவாசன், எக்ஸ்னோரா கிளைத் தலைவா் மலா் சாதிக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வந்தவாசி பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலய நிா்வாகியான பிரம்மகுமாரி முத்துலட்சுமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று உடல் நலம், மன நலம் குறித்து சிறப்புரையாற்றினாா். மேலும், தூய்மைப் பணியாளா்களுக்கு

யோகா பயிற்சி அளித்தாா். நகராட்சி துப்புரவு மேற்பாா்வையாளா் லோகநாதன் நன்றி கூறினாா்.