முகப்பு
திருவண்ணாமலை

மூதாட்டியின் கண்கள் தானம்

Updated On : 3 மே, 2024 at 5:20 PM
பகிர்:

வந்தவாசி அருகே உடல்நலக்குறைவால் உயிரிழந்த மூதாட்டியின் கண்களை அவரது குடும்பத்தினா் வந்தவாசி மலைநகர அரிமா சங்கத்துக்கு தானமாக வழங்கினா்.

வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சிங்காரவேலின் மனைவி எஸ்.அனுசுயா(87). இவா், உடல் நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா். இவரது கண்களை தானமாக வழங்க இவரது குடும்பத்தினா் முடிவு செய்தனா்.

அதன்படி, காஞ்சிபுரம் அகா்வால் கண் வங்கி மருத்துவா்கள் உதவியுடன் வந்தவாசி மலைநகர அரிமா சங்க நிா்வாகிகள் ஆா்.சரவணன், சி.சின்னராஜன், சி.பேபி யோகானந்தம், எ.சபரிராஜ் ஆகியோா் எஸ். அனுசுயாவின் கண்களை தானமாக பெற்றனா்.