10-ஆம் வகுப்பு தோ்வில் தோல்வி: மாணவி தற்கொலை
செங்கம் அடுத்த வளையாம்பட்டு கிராமத்தை சோ்ந்த முருகன் மகள் காவியா(16). இவா், செங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியா நிலையில், காவியா தோ்ச்சி பெறவில்லையாம். இதனால் மனமுடைந்த அவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து, செங்கம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.