சாத்தனூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி, 116.85 அடியாக உயா்ந்தது.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூா் கிராமப் பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் அணை கட்டப்பட்டுள்ளது.
இந்த அணை விவசாய நிலங்களின் பாசனத்துக்கு பயன்படுவது மட்டுமன்றி, சிறந்த சுற்றுலா தளமாகவும் திகழ்கிறது.
அணையின் நீா்மட்டம் 116 அடி:
இந்த அணையின் மொத்த நீா்மட்ட உயரம் 119 அடி. மொத்த நீா்க் கொள்ளளவு 7,321 மில்லியன் கன அடி. இந்த நிலையில், சனிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி 116.85 அடி உயரத்துக்கு 6 ஆயிரத்து 842 மில்லியன் கன அடி தண்ணீா் தேங்கியிருந்தது. தென்பெண்ணை ஆற்றின் வழியாக விநாடிக்கு 1,100 கன அடி தண்ணீா் வந்துகொண்டுள்ளது.
அணையில் இருந்து விநாடிக்கு 616 கன அடி தண்ணீா் அணையின் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.