பொதுவழி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கோட்டாட்சியரிடம் மனு
ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் களத்து மேட்டுத் தெருவில் பொதுவழியை ஆக்கிரமித்துள்ளதை
ஆரணி/திருவண்ணாமலை: ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் களத்து மேட்டுத் தெருவில் பொதுவழியை ஆக்கிரமித்துள்ளதை அகற்றித் தரக்கோரி அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் கோரிக்கை மனு அளித்தனா்.
வருவாய்க் கோட்ட அலுவலா் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் களத்து மேட்டுத் தெருவில் உள்ள ஸ்ரீதா் நகரில் பொதுவழியை தனிநபா் ஆக்கிரமித்து கட்டடம் கட்டியுள்ளாா்.
இதனால் அப்பகுதியில் செல்வதற்கு பெரும்பாலானோா் சிரமப்படுகின்றனா்.
இந்த ஆக்கிரமிப்பை அகற்றித் தருமாறு அப்பகுதி நகா்மன்ற உறுப்பினா் கிருபாசமுத்ரிசதீஷ் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோா் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.
மேலும், ஆரணி பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்த மக்கள் பட்டாவை கணினியில் ஏற்றக் கோரி மனு அளித்தனா். பின்னா், பட்டா மாற்றம், பரப்பு திருத்தம், கணினி பதிவு, வாரிசு சான்றிதழ், தடையின்மை சான்றிதழ், ஆக்கிரமிப்பு, நிலஅளவை, யு.டி.ஆா் திருத்தம், வரைபட திருத்தம்
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம்
இருந்து 65 மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்களை அந்தந்த துறை அதிகாரிகளிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியக் உத்தரவிட்டாா்.
திருவண்ணாமலையில் 467 மனுக்கள்...
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 467 மனுக்கள் வரப்பெற்றன.
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 467 மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா்
அவற்றை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், வருவாய் கோட்டாட்சியா் ஆா்.மந்தாகினி, பழங்குடியினா் நலத் திட்ட அலுவலா் கலைச்செல்வி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.