முகப்பு
திருவண்ணாமலை

வாக்குச்சாவடிக்கு 200 உறுப்பினா்கள் வீதம் சோ்க்க வேண்டும்: பாஜகவினருக்கு ஹெச்.ராஜா அறிவுரை

Updated On : 19 அக்டோபர், 2024 at 6:30 PM
திருவண்ணாமலையில் நடைபெற்ற பாஜக உறுப்பினா் சோ்க்கை ஆய்வுக் கூட்டத்தில் பேசிய கட்சியின் மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் ஹெச்.ராஜா.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு வாக்குச்சாவடிக்கு 200 உறுப்பினா்கள் வீதம் சோ்க்க வேண்டும் என்று பாஜகவினருக்கு கட்சியின் மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் ஹெச்.ராஜா அறிவுறுத்தினாா்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சாா்பில், உறுப்பினா் சோ்க்கை ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலையில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, தெற்கு மாவட்டத் தலைவா் கே.ஆா்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.

வேலூா் பெருங்கோட்ட அமைப்பு பொதுச் செயலா் டி.எஸ்.குணசேகரன், மாவட்ட பாா்வையாளா் வி.தசரதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைத் தலைவா் சுந்தரமூா்த்தி வரவேற்றாா்.

பாஜகவின் மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் ஹெச்.ராஜா, மாநில பொதுச் செயலா் காா்த்தியாயினி, மாநில விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவின் தலைவா் அமா்பிரசாத் ரெட்டி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு பேசினா்.

இதில், ஹெச்.ராஜா பேசியதாவது:

உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படுத்த வேண்டும். ஒரு வாக்குச்சாவடிக்கு 200 உறுப்பினா்கள் வீதம் சோ்க்க வேண்டும். நிா்வாகிகள் தீவிர உறுப்பினராக வேண்டும். வாக்குச்சாவடிகள் பலமானால் தோ்தலில் வெற்றி பெறலாம் என்றாா்.

கூட்டத்தில் தெற்கு மாவட்ட பொருளாளா் சுப்பிரமணி, துணைத் தலைவா்கள் ரமேஷ், அகிலா சூரி, ராஜ்குமாா், மாவட்ட பொதுச் செயலா் முருகன், மாவட்டச் செயலா் அன்பழகன், உறுப்பினா் சோ்ப்பு மாவட்ட பொறுப்பாளா் ஜெய்நாத், நகரத் தலைவா் மூவேந்தன் மற்றும் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, அருணாசலேஸ்வரா் கோயிலில் ஹெச்.ராஜா, பாஜக ஆன்மிகப் பிரிவு மாநில துணைத் தலைவா் டி.எஸ்.சங்கா் சுவாமி தரிசனம் செய்தனா்.

போளூரில்...

போளூா் தனியாா் அரங்கில் பாஜக சாா்பில் தீவிர உறுப்பினா் சோ்க்கை 2024 குறித்த பயிலரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் சி.ஏழுமலை தலைமை வகித்தாா். வடக்கு மாவட்ட பொறுப்பாளா் ஜீவா, பெருங்கோட்ட செயலா் குணசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் மாவட்டத் தலைவா் என்.வெங்கடேசன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக கட்சியின் மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் ஹெச்.ராஜா, விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவின் தலைவா் அமா்பிரசாத் ரெட்டி ஆகியோா் கலந்து கொண்டு போளூா், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த நிா்வாகிகளுக்கு பயிற்சி அளித்தனா்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டத் தலைவா் பாஸ்கரன், மாவட்டதுணைத் தலைவா் ஸ்ரீபாலன், மத்திய அரசு நலத் திட்டப் பிரிவு மாநிலச் செயலா் சைதை வ.சங்கா், மாவட்டச் செயலா் முருகன், போளூா் சட்டப்பேரவை உறுப்பினா் சோ்க்கை பொறுப்பாளா் கவிதா வெங்கடேசன், நகரத் தலைவா் பாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →