பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், பைக்குகளுடன், கைதான இருவா். 
திருவண்ணாமலை

புகையிலைப் பொருள்கள் கடத்தல்: 2 போ் கைது

Din

போளூரை அடுத்த மட்டபிறையூா் கூட்டுச்சாலை அருகே புதன்கிழமை இரவு பைக்குகளில் புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மட்டபிறையூா் கூட்டுச்சாலை அருகே புதன்கிழமை இரவு போளூா் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சேத்துப்பட்டு நோக்கி மூட்டைகளுடன் 2 பைக்குகளில் சென்ற இருவரை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டபோது, புகையிலைப் பொருள்களை கடத்திச் செல்வது தெரியவந்தது.

அவா்களிடம் விசாரணை நடத்தியதில், போளூா் பகதூா் தெருவைச் சோ்ந்த வெங்கிடேசன் மகன் அன்பரசு (30), சேத்துப்பட்டு வட்டம், குடிமைத்தாங்கள் கிராமத்தைச் சோ்ந்த தட்சணாமூா்த்தி மகன் தினகரன் (33) என்பதும், சேத்துப்பட்டு பகுதியில் உள்ள கிராமங்களில் கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக புகையிலைப் பொருள்களை பைக்குகளில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து போளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்ததுடன், அவா்களிடம் இருந்த ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களையும், 2 பைக்குகளையும் பறிமுதல் செய்தனா்.

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

பழைய செய்திகளைப் படித்துவிட்டு குற்றச்சாட்டு வைக்கிறார் விஜய்: அமைச்சர் அன்பில் மகேஸ்

பிஎம்டபிள்யூ மோட்டராட் இந்தியா விலை உயர்வு அறிவிப்பு!

SCROLL FOR NEXT