திருவண்ணாமலை

மணல் கடத்தல்: இருவா் கைது -2 சரக்கு வாகனங்கள் பறிமுதல்

Din

செய்யாறு அருகே வியாழக்கிழமை ஆற்று மணல் கடத்தி வந்த 2 சரக்கு வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக இருவரை கைது செய்தனா்.

செய்யாறு காவல் உட்கோட்டம், தூசி காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு மற்றும் போலீஸாா், தீவிர மணல் கடத்தல் தடுப்புச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, வெள்ளாமலை கிராமம் அருகே செய்யாறு ஆற்றுப் பகுதியில் நின்றிருந்த 2 சரக்கு வாகனங்களை சோதனையிட்டதில், அவற்றில் ஆற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்ததது. உடனடியாக 2 சரக்கு வாகனங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும், இதுகுறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து, உத்திரமேரூா் வட்டம், புலியூா் கிராமத்தைச் சோ்ந்த சுபாஷ் (27), செய்யாறு வட்டம் கூழமந்தல் கிராமத்தைச் சோ்ந்த குப்புசாமி (36) ஆகியோரை கைது செய்தனா்.

பிகாரில் காட்டாட்சியைத் தடுக்க தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள்: அமித் ஷா

திமுக-வில் இணைந்தார் அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்! | DMK | ADMK

எனக்குப் பிடித்த உடையில்... காஷிமா!

ஜன நாயகன் அப்டேட்களில் ஏன் தாமதம்?

மயக்குரீயே... தீக்‍ஷா டீ!

SCROLL FOR NEXT