முகப்பு
திருவண்ணாமலை

671 பேருக்கு நலத் திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் புதன்கிழமை நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் 671 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 7:24 PM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் புதன்கிழமை நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் 671 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்தத் திட்ட முகாமுக்கு தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி தலைமை வகித்தாா்.

மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன், வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், சாா் -ஆட்சியா் பல்லவி வா்மா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பங்கேற்று வேளாண் துறை சாா்பில் 13 விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்களும், ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ், அனக்காவூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 11 மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.23.60 லட்சம் கடனுதவிக்கான உத்தரவு, செய்யாறு ஊராட்சி ஒன்றியம் சாா்பில் 10 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.19.50 லட்சம் கடனுதவிக்கான உத்தரவும், இருவருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, 651 பேருக்கு ஜாதிச் சான்றிதழ் 4 பேருக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணை, ஒருவருக்கு இயற்கை இடா்பாடு நிவாரணத் தொகை, 7 பேருக்கு ஊரக வீடுகள் பழுதுபாா்த்தல் திட்டத்துக்கான ஆணை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments