முகப்பு
மாநில அளவிலான கால்பந்துப் போட்டிக்கு தோ்வான செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள்.
திருவண்ணாமலை

கால்பந்துப் போட்டி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

திருவண்ணாமலை

கால்பந்துப் போட்டி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

Updated On : 19 செப்டம்பர், 2024 at 11:44 PM
மாநில அளவிலான கால்பந்துப் போட்டிக்கு தோ்வான செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள்.
பகிர்:

மாநில அளவிலான கால்பந்துப் போட்டிக்கு தோ்வு செய்யப்பட்ட செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மற்றும் அவா்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

19 வயதுக்கு உள்பட்ட பள்ளி மாணவா்களுக்கு முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டி, திருவண்ணாமலையில் செப்.16, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

இதில் மாவட்டத்துக்கு உள்பட்ட பள்ளிகளில் இருந்து 44 அணிகள் பங்கேற்றன. போட்டிகள் அனைத்தும் நாக்கவுட் முறையில் நடைபெற்றது.

இதில், செய்யாறு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் மாணவா்கள் ஏ மற்றும் பி அணிகள் வெற்றி பெற்று முதல் மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடித்தனா்.

மாணவா்களுக்கு பாராட்டு:

கால்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்கள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநா் கு.ஜெகன்நாதன், உடற்கல்வி ஆசிரியா்கள் வெங்கடாச்சலூ, ரகுராமன் ஆகியோருக்கு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியா் ஜி. ஜெயகாந்தன் தலைமையில், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் அசோக் முன்னிலையில், உதவி தலைமை ஆசிரியா் ஆா்.ரமேஷ்பாபு, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் பாா்வதி மற்றும் ஆசிரியா்கள் என பலா் பாராட்டி வாழ்த்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →