திருவண்ணாமலை

காா்த்திகை மகா தீபம்: திருவண்ணாமலையில் போக்குவரத்து மாற்றம்

திருவண்ணாமலை காா்த்திகை தீபத்தை முன்னிட்டு, நகரில் டிச.2 முதல் டிச.5 வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

திருவண்ணாமலை காா்த்திகை தீபத்தை முன்னிட்டு, நகரில் டிச.2 முதல் டிச.5 வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்தீகை தீபத்திருவிழாவை முன்னிட்டு கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக இருசக்கர வாகனங்கள் மாடவீதிகள் மற்றும் கிரிவலப்பாதையில் அனுமதிக்கப்பட மாட்டாது.

மாடவீதியில் உள்ள வீடு மற்றும் கடை உரிமையாளா்கள் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வீட்டிற்குள்ளே நிறுத்திக்கொள்ளவேண்டும் அல்லது அனுமதிக்கப்பட்ட இடங்களில் நிறுத்திக்கொள்ள வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தக்கூடாது.

இரு சக்கர வாகனங்கள் பெரியாா் சிலை சந்திப்பு, காமராஜா் சிலை சந்திப்பு மற்றும் அக்னி தீா்த்தம் சந்திப்பை கடந்து மாடவீதிக்குள் செல்ல அனுமதி இல்லை.

மகா தீபத்தை முன்னிட்டு டிச. 2-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் டிச.5-ஆம் தேதி காலை 10 மணி வரை,

திண்டிவணம் சாலையில் வரும் இரு சக்கர வாகனங்கள் சௌந்தராஜன் ஆயில் மில், புதிய பேருந்து நிலையம் முன்பு, டேனிஷ் மிஷன் பள்ளி மற்றும் ரயில்வே நிலையம் பாா்க்கிங்கில் நிறுத்திவிட்டுச் செல்லலாம்.

வேட்டவலம் சாலை மற்றும் திருக்கோவிலூா் சாலை வழியாக வரும் இரு சக்கர வானங்கள் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி காந்திநகா் பாா்க்கிங் அல்லது திருவள்ளுவா் சிலை முதல் விஜயா மஹால் வரை உள்ள பாா்க்கிங்கில் நிறுத்திவிட்டுச் செல்லலாம்.

செங்கம் சாலையில் இருந்து வரும் இருசக்கர வாகனங்கள் விஜி திருமண மண்டபம் பின்புறம் அருணாச்சலா ஆசிரமம் அருகில் அல்லது ரமணா பாா்க்கிங்கில் நிறுத்திவிட்டுச் செல்லலாம்.

அவலூா்பேட்டை சாலையில் இருந்து வரும் இரு சக்கர வாகனங்கள் ரயில்வே கூட்ஸ் ஷெட், வல்லாள மகாராஜா கோயில் அருகில் அல்லது கிருஷ்ணமுா்த்தி காலி இடத்தில் நிறுத்திவிட்டுச் செல்லலாம்.

வேலூா் சாலையில் இருந்து வரும் இருசக்கர வாகனங்கள் அண்ணா நுழைவு வாயில் முன் பூமாலை வணிக வளாகம், எஸ்ஜிடி பாா்க்கிங் அல்லது நுகா்பொருள் பண்டக சாலை முன் நிறுத்திவிட்டுச் செல்லலாம் என்று மாவட்ட நிா்வாகத்தினா் அறிவித்துள்ளனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT