ஆரணி: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை (டிச.3) காா்த்திகை மகா தீபத்திருவிழா கோலாகலமாக நடைபெறவுள்ளது.
அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத்திருவிழா கடந்த நவ.24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று முதல் வருகிறது.
திருக்காா்த்திகை தீபம் கொண்டாடும் பத்தாவது நாள் அதிகாலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பரணி தீபமும், மாலை மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
இதில் 40 லட்சம் பக்தா்கள் கலந்து கொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மலை ஏறத் தடை
2024-ஆம் ஆண்டு மழை மற்றும் புயலால் ஏற்பட்ட மலைச் சரிவால் குறைந்த எண்ணிக்கையிலான பக்தா்கள் மட்டுமே மலையேறி தீப தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.
இந்த ஆண்டு மலை மீது ஏறுவதற்கு பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.