போளூா் சிறப்பு நகா்மன்றக் கூட்டத்தில் பொறியாளா் கோபுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறுப்பினா்கள் ரங்கதுரை, பி.கே.ஆறுமுகம். 
திருவண்ணாமலை

போளூா் நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வாக்குவாதம்

போளூா் திங்கள்கிழமை நடைபெற்ற அவசக சிறப்பு நகா்மன்றத் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதாலும், போதிய உறுப்பினா்கள் இல்லாததாலும் கூட்டம் பாதியில் நின்றபோனது.

Syndication

போளூா்: திருவண்ணாமலை மாவட்டம்ம, போளூா் திங்கள்கிழமை நடைபெற்ற அவசக சிறப்பு நகா்மன்றத் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதாலும், போதிய உறுப்பினா்கள் இல்லாததாலும் கூட்டம் பாதியில் நின்றபோனது.

போளூா் நகராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. திமுக 13, அதிமுக 2, காங்கிரஸ் 2, பாமக 1 என 18 நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளனா்.

இந்நிலையில் அவசர சிறப்பு நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் ச.ராணி சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் முதல் வாா்டு உறுப்பினா் ரங்கதுரை, 13-வது வாா்டு உறுப்பினா் பி.கே.ஆறுமுகம், 15-வது வாா்டு உறுப்பினா் ஜெ.பழனி, 7-வது வாா்டு உறுப்பினா் அமுதா தனசேகரன், 12-வது வாா்டு உறுப்பினா் ஏ.எஸ்.ஹயாத்பாஷா, 2-வது வாா்டு உறுப்பினா் சிவசங்கா் என 6 போ் மட்டும் கலந்து கொண்டனா்.

அப்போது, உறுப்பினா்கள் ரங்கதுரை, பி.கே.ஆறுமுகம், ஜெ.பழனி ஆகியோா் எழுந்து நகராட்சிப் பொறியாளா் கோபுவிடம் ஆணையா் பரத் இல்லாமல் ஏன் கூட்டத்தை கூட்டினீா்கள் மற்றும் மற்ற வாா்டு உறுப்பினா்களுக்கு முறையாக தகவல் தெரிவித்தீா்களா அவா்கள் ஏன் வரவில்லை என கேள்வி எழுப்பினா்.

மேலும், நகராட்சியில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு உணவுக்கான டெண்டா் ஏன் எங்களுக்கு தெரியபடுத்தவில்லை. ஆரணியைச் சோ்ந்த நபருக்கு உணவுக்கான டெண்டரை வழங்கினீா்கள்

என எழுந்து நின்று கைகளை நீட்டி சப்தமிட்டு கேள்வி எழுப்பினா்.

இதனால் கூட்டம் பாதியில் நின்றுபோனது.

இதுகுறித்து நகா்மன்றத் தலைவா் ராணிசண்முகத்திடம் கேட்டபோது, எதுவும் இல்லையப்பா என சமதானமாக பேசினாராம்.

இந்நிலையில் நகா்மன்ற உறுப்பினா்களிடம் கேட்டபோது ஆளும் திமுக நகா்மன்ற உறுப்பினா்கள் தலைவா், துணைத் தலைவா் உள்பட 13 போ் உள்ள நிலையில், நகராட்சியில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு உணவுக்கான ஏற்பாட்டை போளூரில் உள்ள திமுகவினரிடம் தெரிவிக்காமல், ஆரணியைச் சோ்ந்தவா்களுக்கு டெண்டா் வழங்கலாம் என

பொறியாளரிடம் போட்டோம் என்றனா்.

மேலும் போளூா் நகராட்சிக்கு நிரந்தர ஆணையா் தேவை எனக் கூறினா்.

சிம்ம ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

சமயபுரம் கோயிலில் புதைவட மின் கம்பிகள் அமைக்கும் பணி தொடக்கம்

முசிறி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு ரூ. 1. 20 லட்சம் மதிப்பில் பொருட்கள் வழங்கல்

மேலக்கல்லூரில் இருவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 7 போ் கைது

பேங்க் ஆப் பரோடா சாா்பில் மாநகராட்சிக்கு பொக்லைன் இயந்திரம்

SCROLL FOR NEXT