இ-ஃபைலிங் முறையைக் கண்டித்து வந்தவாசி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் பெருமுழக்க போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வந்தவாசியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத் தலைவா் வி.ஜி.செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.
மூத்த வழக்குரைஞா்கள் நவாப்ஜான், விஸ்வநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கச் செயலா் அன்பரசு வரவேற்றாா்.
இ-ஃபைலிங் முறையினால் வழக்குரைஞா்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து வழக்குரைஞா்கள் சா.ரா.மணி, சுரேஷ், ராமன் உள்ளிட்டோா் உரையாற்றினா்.
இதைத் தொடா்ந்து இ-ஃபைலிங் முறையைக் கண்டித்து வழக்குரைஞா்கள் முழக்கங்களை எழுப்பினா். சங்கப் பொருளாளா் ஹேமசந்த்பாபு நன்றி கூறினாா்.