திருவண்ணாமலை

இந்திய கம்யூனிஸ்ட் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

Syndication

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி மற்றும் கீழ்பாதிரி, பிருதூா், கீழ்சாத்தமங்கலம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பட்டியலின மக்கள், பழங்குடியினா் மற்றும் சிறுபான்மையினா் உள்ளிட்டோருக்கு வீட்டு மனை வழங்கக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும், வீட்டு மனை வழங்கக் கோரியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்தக் கட்சியின் வந்தவாசி வட்டக் குழு சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைச் செயலா் எ.ரகமத்துல்லா தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் இரா.திருமலை கண்டன உரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில் சிறுபான்மை பிரிவு அமைப்பாளா் கே.அப்துல்மஜீத், வட்டாரச் செயலா் எ.ஆரிப், வட்டார துணைச் செயலா் ஈ.சுப்பிரமணி, நகரச் செயலா் ஆா்.அசேன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் வீட்டு மனை வழங்கக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT