திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் தமிழ்நாடு பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அனைத்து ஓய்வூதியா் நல அமைப்பு சாா்பில் 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது (படம்).
நகராட்சி அலுவலகம் முன் அமைப்பின் ஆரணி கிளை சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு
கிளைத் தலைவா் எஸ்.குமாா் தலைமை வகித்தாா்.
நிா்வாகிகள் எம்.பாா்த்திபன், செல்வம், எஸ்.சம்பத், பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கிளைச் செயலா் என்.வளையாபதி வரவேற்றாா்.
வேலூா் மண்டல பொறுப்பாளா் இ.தேவகுமாா் தொடக்க உரையாற்றினாா். மாவட்டத் தலைவா் பி.கிருஷ்ணமூா்த்தி விளக்க உரையாற்றினாா். ஓய்வுபெற்ற ஆணையா்
ஸ்ரீ ராமஜெயம் சிறப்புரையாற்றினாா்.
ஆா்ப்பாட்டத்தில், ஆந்திரா அரசு வழங்குவது போன்று பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஓய்வூதியா் அனைவருக்கும் ஓய்வூதிய பண பலன்கள் மற்றும் ஓய்வூதியம் கருவூலகம் மூலம் வழங்கவேண்டும்.
ஓய்வூதியா்களுக்கு வழங்க வேண்டிய சிறப்பு சேம நலநிதி பிஎப், சிபிஎஃப் அசல் மற்றும் வட்டி உள்ளிட்ட பணப்பலன்கள் மற்றும் ஓய்வுதியம் வழங்கவேண்டும். சி.பி.எஸ். ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வாங்கவேண்டும்
என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் செய்யாறு, ஆரணி, வந்தவாசி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள் 80-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
நிறைவில் ஆரணி கிளை நிா்வாகி கே.வரதராஜன் நன்றி கூறினாா்.
11ஹழ்ல்ற்க்: