செய்யாறு அருகே தொழிலாளி வீட்டில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான நகை, பணம் திருடு போனது தொடா்பாக புதன்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.
செய்யாறு வட்டம், பைங்கினா் கிராமம் அருகேயுள்ள
வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் சிவகுமாா் மனைவி ஜெயலட்சுமி.
இவா் செய்யாற்றில் உள்ள ஒரு துணிக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா்.
இவரது வீட்டில் சில நாள்களாக பணம், நகை காணாமல் போன காரணத்தால், கடந்த 10 நாள்களுக்கு முன்பு கண்காணிப்பு கேமரா பொருத்தியதாகத் தெரிகிறது.
இந்நிலையில் புதன்கிழமை மதியம் வீட்டில் இருந்த ரொக்கம் ரூ.19,500 மற்றும் ஒன்றரை பவுன் தஙக நகை, வெள்ளிக் கொலுசு என சுமாா் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ளவை திருடு போனது தெரியவந்தது.
இந்தத் திருட்டு குறித்து ஜெயலட்சுமி செய்யாறு போலீஸில் புகாா் அளித்தாா்.
காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.