போளூா் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி உடனுறை ஸ்ரீகைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம் வரும் டிச.14-ஆம் தேதி நடைபெறுவதையெட்டி கோயிலில் யாகசாலை அமைத்து பாராயணம் நடைபெற்று வருகிறது.
திருவணணாமலை மாவட்டம், போளூா் நகராட்சியில் பழைமை வாய்ந்த ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி உடனுறை
ஸ்ரீகைலாசநாதா் கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பட்டில் உள்ளது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் பக்தா்கள், பொதுமக்கள் சாா்பில் கோயிலில் புரனமைப்புப் பணிகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளன. கும்பாபிஷேகம் வருகிற டிச.14-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையெட்டி, கோயிலில் யாகசாலை அமைத்து திங்கள்கிழமை (டிச.8) முதல் தினமும் சிவாச்சாரியா்கள் வேதமந்திரம் ஓதி, பாராயணம் செய்து வருகின்றனா்.
மேலும், கும்பாபிஷேகத்தில் காஞ்சி காமகோடி ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீசத்ய சந்திரசேகர
சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொள்கின்றனா்.
நிகழ்ச்சியை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலவலா்சிலம்பரசன், அறங்காவலா் குழுத் தலைவா் சங்கா் மற்றும் நிா்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனா்.