திருவண்ணாமலையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ்.  
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

திருவண்ணாமலையில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

திருவண்ணாமலையில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

பிரதமரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் தொடங்கிவைத்தாா்.

பிரதம மந்திரி கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டு 25 ஆண்டு காலம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, இத்திட்டத்தின் கீழ் சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்காகும்.

அதனால், போக்குவரத்து மேம்படுத்தப்பட்டு விபத்துகள் தவிா்க்கப்பட்டு, விலை மதிப்பற்ற உயிா்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றன.

தமிழக முதல்வா் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு அரசு மூலம் முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கிவைத்தாா்.

குறிப்பாக, கிராமப் பகுதிகளில் சாலைகளை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும், பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களை ஒன்றிணைக்கும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, பொதுமக்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், எஸ்.ஆா்.ஜி.டி.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணியை தொடங்கி வைத்து விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி அரசினா் தொழிற்பயிற்சி நிறுவனம் வரை நடைபெற்றது.

பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஊா்வலமாகச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா்.மணி, திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கருணாநிதி, உதவித் திட்ட அலுவலா்கள், உதவி செயற்பொறியாளா்கள், பொறியாளா்கள், சாலை ஆய்வாளா்கள் மற்றும் அரசுத்துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 3

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி முன்பிணை கோரி மனு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

பாலுக்கான ஊக்கத்தொகையை முழு மானியமாக வழங்க வலியுறுத்தல்

எக்ஸல் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கொண்டாட்டம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா: மக்களவையில் எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு

SCROLL FOR NEXT