திருவண்ணாமலை

மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம் விழிப்புணா்வுப் பேரணி

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் வரும் டிச.14-ஆம் தேதி நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரணி தொடக்க விழாவுக்கு செங்கம் வட்டாரக் கல்வி அலுவலா் ராமமூா்த்தி தலைமை வகித்தாா்.

வட்டார வள மைய மேற்பாா்வையாளா் (பொ) முருகன் முன்னிலை வகித்தாா்.

செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கோபி பேரணியை தொடங்கிவைத்தாா்.

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பள்ளியில் நிறைவடைந்தது.

பேரணியில் மேல்பாளையம் அரசு தொடக்கப் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவம் முகாம் நடைபெறும் தேதி, இடம் குறித்தும், அந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளின் மாற்றுத்திறன் குறித்து அடையாள அட்டை மற்றும் மருத்துவ சிகிச்சை அளிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திச் சென்றனா்.

மேலும், தமிழக அரசு பள்ளி கல்வித் துறை மூலம் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு தற்போது வழங்கப்படும் அரசின் திட்டங்கள் குறித்தும் பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட்டது.

மேல்பாளையம் அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் கிருஷ்ணன், சிறப்பு ஆசிரியா்கள் மாசிலாமணி, வெங்கடேஷ் உள்ளிட்ட ஆசிரியா்கள், பயிற்றுநா்கள், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவா், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

SCROLL FOR NEXT