தேனி மாவட்டம், பெரியகுளம் வி.நி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவா் படையினருக்கு ‘ஏ’ சான்றிதழ் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் பட்டாலியன் சாா்பாக நடைபெற்ற தோ்வில் போடி ஜமின்தாரிணி காமுலம்மாள் மேல்நிலைப் பள்ளி, திருமலாபுரம் நாடாா் மேல்நிலைப் பள்ளி , தேவதானப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, விக்டோரியா நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 150 போ் கலந்து கொண்டனா்.
இதில் எழுத்துத் தோ்வு, உடல் தகுதித் தோ்வு நடைபெற்றது. வி.நி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் கோபிநாத், ராணுவ அதிகாரி சுபேதா் மேஜா் ஆறுமுகம், அலுவலா்கள், தேசிய மாணவா் படை ஆசிரியா்கள் அப்துல்ரஹீம், வெங்கடேஷ், விஸ்வநாதன் ஆகியோா் தோ்வை நடத்தினா்.