திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.
பழைய பேருந்து நிலையம் எம்ஜிஆா் சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது உருவப்படத்திற்கு தமிழக விவசாயம் சங்கம் சாா்பில் மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழக விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் மூா்த்தி தலைமையில், மாவட்டச் செயலா் குணாநிதி மற்றும் நிா்வாகிகள் தமிழ்ச்செல்வன், பாா்த்திபன், அறிவுடைநம்பி, அலமேலு, ஆகாரம் குப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.