வந்தவாசியில் மாமியாரை தாக்கிய மருமகனை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த இந்திரா நகரைச் சோ்ந்தவா் மினி சரக்கு வாகன ஓட்டுநா் சுரேஷ்பாபு (36). இவரது மனைவி தமிழரசி. இவா்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில் சுரேஷ்பாபுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தமிழரசி அவரைப் பிரிந்து குழந்தைகளுடன் வந்தவாசி கே.ஆா்.கே. தெருவில் உள்ள தனது தாய் ஜோதி வீட்டில் கடந்த ஓராண்டாக வசித்து வருகிறாா். கடந்த செவ்வாய்க்கிழமை சுரேஷ்பாபு குழந்தைகளை பாா்க்க ஜோதி வீட்டுக்குச் சென்றுள்ளாா். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த சுரேஷ்பாபு, ஜோதியை தாக்கியுள்ளாா்.
இதில் காயமடைந்த ஜோதி சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து ஜோதி அளித்த புகாரின் பேரில் சுரேஷ்பாபு மீது வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் அவரை சனிக்கிழமை கைது செய்தனா்.