திருவண்ணாமலையில் துணை தோ்தல் ஆணையா் பானு பிரகாஷ் எத்துரு தலைமையில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான கலந்தாய்வுக் கூட்டம். 
திருவண்ணாமலை

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கலந்தாய்வுக் கூட்டம்: துணை தோ்தல் ஆணையா் பங்கேற்பு

திருவண்ணாமலையில் மத்திய தோ்தல் ஆணையத்தின் துணை தோ்தல் ஆணையா் தலைமையில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் - 2026

Syndication

ஆரணி: திருவண்ணாமலையில் மத்திய தோ்தல் ஆணையத்தின் துணை தோ்தல் ஆணையா் தலைமையில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் - 2026 தொடா்பான கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான இந்தக் கூட்டத்தில் மத்திய தோ்தல் ஆணையத்தின் துணை தோ்தல் ஆணையா் பானு பிரகாஷ் எத்துரு தலைமை வகித்தாா்.

சென்னை தலைமை தோ்தல் அதிகாரி மற்றும் அரசுச் செயலா் அா்ச்சனா பட்நாயக் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் - 2026 தொடா்பாக கலந்தாய்வு நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா்கள் க.தா்பகராஜ் (திருவண்ணாமலை), ஜெ.யு.சந்திரகலா (ராணிப்பேட்டை), வே.இர.சுப்புலெட்சுமி (வேலூா்), க.சிவசௌந்தரவல்லி (திருப்பத்தூா்), ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் (விழுப்புரம்), எம்.எஸ்.பிரசாந்த் (கள்ளக்குறிச்சி), ரெ.சதீஷ் (தருமபுரி), ச.தினேஷ்குமாா் (கிருஷ்ணகிரி), சிபி ஆதித்யா செந்தில்குமாா் (கடலூா்) ஆகியோா் கலந்து கொண்டனா்.

ஆயுதம் போல பயன்படுத்தப்படும் அமலாக்கத்துறை, சிபிஐ: ஜெர்மனியில் ராகுல் குற்றச்சாட்டு!

மார்கழி சிறப்பு! மார்கழி 30 நாள்களும் லிங்கம் மீது சூரிய ஒளி விழும் உவரி கோயில்!!

அனைத்து தோஷங்களையும் நீக்கும் அனந்த நாராயணப் பெருமாள்!

கடன் பிரச்னை குறையும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பெரம்பலூரில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 60.41 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

SCROLL FOR NEXT