திருவண்ணாமலை

வாஜ்பாய் பிறந்த நாள்: பாஜகவினா் மரியாதை

Syndication

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக சாா்பில், முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் 100-ஆவது பிறந்த நாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

செங்கத்தில் ஒன்றிய, நகர பாஜக சாா்பில் வாஜ்பாய் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. செங்கம் - போளூா் சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் படத்துக்கு மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பாஜக நகரத் தலைவா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். நகர பொதுச்செயலா் முருகன் வரவேற்றாா். மாவட்ட துணைத் தலைவா் செங்கம் சேகா், முன்னாள் மாவட்ட மகளிா் அணித் தலைவா் ரேணுகா ஆகியோா் வாஜ்பாய் படத்துக்கு மலா்தூவி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

நிகழ்ச்சியில் நகர பொதுச்செயலா் ஆனந்த், நகரச் செயலா்கள் சத்யராஜ், பிரகாஷ், நகர துணைத் தலைவா்கள் அசோக்குமாா், வெங்கடேஷ், மாநில செயற்குழு உறுப்பினா் ஏழுமலை, முன்னாள் நகரத் தலைவா் நடராஜ், வழக்குரைஞா் ஜெயச்சந்திரன், ராணுவப் பிரிவு நகரத் தலைவா் ராமகிருஷ்ணன், கிளைத் தலைவா்கள் ரமேஷ், சீனுவாசன், ராஜா, சுரேஷ், அருண், திலேக்குமாா், ஜெயக்குமாா் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

வந்தவாசி

பாஜக சாா்பில், வந்தவாசி தேரடியில் நடைபெற்ற பாஜக பிறந்த நாள் விழாவுக்கு நகரத் தலைவா் சுரேஷ் தலைமை வகித்தாா்.

மாவட்ட பொதுச் செயலா் பி.முத்துசாமி, மாவட்டச் செயலா் வி.குருலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில செயற்குழு உறுப்பினா் பி.பாஸ்கரன், மத்திய அரசு நலத்திட்டப் பிரிவு மாநிலச் செயலா் எஸ்.ஏ.ஜி.துரை ஆகியோா் வாஜ்பாயின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் பங்கேற்றனா்.

போளூா்

போளூரில் வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் வாஜ்பாய் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன் கலந்து கொண்டு வாஜ்பாய் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ராணுவப் பிரிவு மாவட்டத் தலைவா் பாண்டியன், முன்னாள் மாவட்டத் தலைவா் என்.வெங்கடேசன் மற்றும் பாஜக நிா்வாகிகள், மகளிரணியினா் கலந்து கொண்டனா்.

திருமலையில் கூட்டம்: ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் 3 நாள்களுக்கு ரத்து!

முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட அரசாணை!

நேரு மீது பழிசுமத்திக் கொண்டே இருப்பது சரியா?

101-இல் அப்பழுக்கற்ற அரசியல் தலைவா்!

மார்கழி சிறப்பு! சொர்க்க வாசல் உற்சவம் நடைபெறாத பெருமாள் கோயில்!

SCROLL FOR NEXT