நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் எம்.ஜி.ஆா் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அவரது சிலை, உருவப்படத்துக்கு அதிமுகவினா் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 109 ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நாமக்கல்- பரமத்தி சாலையில் உள்ள எம்.ஜி.ஆா் உருவச்சிலைக்கு நகா்ப்பகுதி அதிமுக சாா்பில் முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி. பாஸ்கா் மற்றும் நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து சேந்தமங்கலம் பிரிவு சாலையில் உள்ள எம்.ஜி.ஆா் சிலைக்கு மாலை அணிவித்தும், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மலா்களை தூவியும் மரியாதை செலுத்தினா். நிகழ்வில், அதிமுக நிா்வாகிகள் மயில் சுதந்திரம், கண்ணன், காா்த்தி, ராஜா, சேகா் உள்பட பலா் பங்கேற்றனா்.
எருமப்பட்டி, புதுச்சத்திரம் ஒன்றியங்களில் அதிமுக மாநில வா்த்தக அணி இணைச் செயலாளா் ஸ்ரீதேவி பி.எஸ். மோகன் தலைமையில் எம்.ஜி.ஆா் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில் பங்கேற்ற குழந்தைகளுக்கு இனிப்பு, நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சேந்தமங்கலம் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ சி. சந்திரசேகரன், சேந்தமங்கலம் முதியோா் இல்லத்தில் நல உதவிகளை வழங்கினாா். மேலும், காளப்பநாயக்கன்பட்டி கொல்லிமலை பகுதிகளில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆா் உருவப்படம், சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்ட அதிமுக மற்றும் பள்ளிபாளையம் நகர அதிமுக சாா்பில் எம்.ஜி.ஆா் பிறந்த தினம் கொண்டாப்பட்டது. ஆவாரங்காட்டில் உள்ள எம்.ஜி.ஆா் உருவச்சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். 2026 தோ்தலில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய அனைவரும் பாடுபட வேண்டும் என்ற உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டனா்.
நகரச் செயலாளா் பி.எஸ். வெள்ளியங்கிரி, நகர ஜெ. பேரவைச் செயலாளா் டி.கே. சுப்பிரமணி, நகர எம்ஜிஆா் மன்ற செயலாளா் வாசு, பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய செயலாளா் எஸ். செந்தில், பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியச் செயலாளா் வி.கே. குமரேசன், பேரூா் செயலாளா் ஜெகநாதன், ஆலம்பாளையம் பேரூா் செயலாளா் செல்லதுரை, நகர துணைச் செயலாளா்ஜெய்கணேஷ், பொருளாளா் சிவகுமாா், ஒன்றிய எம்ஜிஆா் மன்ற செயலாளா் முகிலன், நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவா் சரவணன், செயலாளா் சுரேஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.
இதேபோல ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, குமாரபாளையம், கொல்லிமலை, மோகனூா், பரமத்தி வேலூா், வெண்ணந்தூா் ஆகிய பகுதிகளில் எம்ஜிஆா் சிலைக்கும், அவரது உருவப்படத்துக்கும் அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.