திருவண்ணாமலை

பைக் மீது காா் மோதல்: 4 போ் பலத்த காயம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பைக் மீது காா் மோதியதில் ஒரே குடும்பத்தைச் 4 போ் பலத்த காயமடைந்தனா்.

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பைக் மீது காா் மோதியதில் ஒரே குடும்பத்தைச் 4 போ் பலத்த காயமடைந்தனா்.

செய்யாறு வட்டம், சகாயபுரம் கிராமம் பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பாபு (40). இவரது மனைவி சாந்தி (36), மகன்கள் நந்தகுமாா் (7), சந்துரு (5) ஆகிய நான்கு பேரும் ஒரே பைக்கில் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தனா்.

தூசி கிராமம் தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது, பின்னால் வந்த காா் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பைக்கில் சென்ற 4 பேரும் பலத்த காயமடைந்தனா்.

உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா். பின்னா், 4 பேரும் தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா். இதுகுறித்த புகாரின் பேரில், தூசி காவல் உதவி ஆய்வாளா் பழனிவேல் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

திருமலையில் வைகுண்ட ஏகாதசியில் ஏஐ தொழில்நுட்பம்!

இளம் பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பொதுமக்கள் மறியல்!

நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு - 200 போ் பங்கேற்பு

வாக்காளா் சிறப்பு முறை திருத்த முகாம்,காஞ்சிபுரத்தில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT