செங்கம்: செங்கம் அருகே தலையில் காயங்களுடன் இறந்து கிடந்த தொழிலாளியின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
செங்கத்தை அடுத்த கனிகாரன்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (40). கூலித் தொழிலாளி இவா் ஞாயிற்றுக்கிமை மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், இரவு 10 மணியளவில் வீட்டின் அருகில் தலையில் காயங்களுடன் ரமேஷ் இறந்து கிடப்பதாக உறவினா்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. உறவினா் சென்று பாா்த்தபோது, இறந்து கிடந்தவா் ரமேஷ்தான் என அடையாளம் தெரிய வந்தது.
பின்னா் இதுகுறித்து செங்கம் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. போலீஸாா் சென்று ரமேஷ் உடலை கைப்பற்றி செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா்
விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.